×

நாடாளுமன்ற தேர்தல் புதுவையில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம்: வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். இந்தநிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில், தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தை தொடங்காமலே பாஜவினர் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பாஜ மேலிட பொறுப்பாளரும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான நிர்மல்குமார் சுரானா புதுச்சேரியில் முகாமிட்டு கட்சி கூட்டங்களை நடத்தி வந்தார். மேலும், அந்த கட்சியின் தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பாக எந்த ஒரு எண்ணத்தையும் வெளிப்படுத்தாமல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியும் மவுனம் காத்து வந்தார். இந்தநிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கவுள்ள சூழலில், கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் ரங்கசாமின் கருத்தை அறிய பாஜவினர் முடிவு செய்தனர். இதையடுத்து சுரானா தலைமையில் கட்சி தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் ரங்கசாமியை திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.

அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிட, விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனை ரங்கசாமியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ‘கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் முதல்வரை சந்தித்தோம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது சில ஆலோசனகளை முதல்வர் வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தேஜ கூட்டணி தயராக இருக்கிறது. இன்னும் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் எந்த கட்சி போட்டியிடப்போகிறது என்று தெரியவரும்,’என்றார்.

 

The post நாடாளுமன்ற தேர்தல் புதுவையில் பாஜ போட்டியிட முதல்வர் ரங்கசாமி சம்மதம்: வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,Rangasami ,Baja ,Parliamentary ,N. R. Congress ,Bajaj coalition government ,Bahasa ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...